UAE Tamil Web

துபாய் EXPO-வில் இளையராஜாவுடன் இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்..!

துபாய் Expo 2020 ஏ.ஆர். ரஹ்மானால் தொடங்கப்பட்டிருக்கும் உலகத்தரம் வாய்ந்த இசைக்கூடம் – ‘Firdause Studio by AR.Rahman’. துபாய் அரசாங்கத்தின் சர்வதேச ஒத்துழைப்புத்துறையின் ஆதரவோடு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது துபாய் EXPO 2020-வில் இந்திய அரங்கில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை காண பல நாட்டு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. துபாய் EXPO இந்திய அரங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டத்துடன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து இளையராஜாவை வரவேற்ற ஏ.ஆர்.ரஹ்மான், தனது ஸ்டூடியோவை அவருக்கு சுற்றி காண்பித்து, அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில், ‘மேஸ்ட்ரோவை பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. எங்கள் ஸ்டூடியோவில் அவர் இசை அமைப்பார் என நம்புகிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு மகிழ்ச்சியோடு இளையராஜாவும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். விரைவில் ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவில் இசைக்கலைஞர்கள் இளையராஜாவின் இசையை வாசிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap