UAE Tamil Web

அமீரகத்தில் வசிக்க அதிகளவில் விருப்பப்படும் இளைஞர்கள் : கருத்துக்கணிப்பில் வெளிவந்த தகவல்..!

UAE public, private sector holidays

பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான ASDA’A BCW, 17 அரபு நாடுகளில் உள்ள இளைஞர்களிடத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றினை நடத்தியது. அதில் 47 அரபு இளைஞர்கள் அமீரகத்தில் வசிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்க 19% பேரும் கனடாவில் வசிக்க 15% பேரும் வசிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியால்ருமான் பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” இதனாலேயே அமீரகத்தை அனைவருக்குமான நாடு எனச் சொல்கிறோம். அமீரகம் அனைவருடைய இல்லமாகும்..அனைத்து மக்களுடனும் நாங்கள் இயங்கியிருக்கிறோம்..எங்களுடைய உறவு அனைத்து தரப்பு மக்களுடனும் நேர்மறையாகவே உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

UAE public, private sector holidays
3 Shares
Share via
Copy link