அமீரக வாசிகளுக்கும், வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக வேலை இல்லாதோருக்கு இன்சூரன்ஸ் அளிக்க முடிவு செய்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம் அரசு. இந்த திட்டம் அடுத்த ஆண்டு 2023-இல் நடமுறைக்கும் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டு ஊழியர்கள், நிறுவனங்கள், முதலீடுகளை ஈர்க்க வேண்டியும், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் வேலையில்லாதோருக்கான இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குச் சில குறிப்பிட்ட அளவிலான பணத்தை உதவித் தொகையாகப் பெறுவார்கள் என்று அமீரகத்தின் மாண்புமிகு துணை பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ட்விட்டரில் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க அனைவருக்கும் நிலையான நோக்கத்தின் அடிப்படையில் இந்த இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக அமீரக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளான கத்தார், ஓமன், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை குடிமக்களுக்கும், வேலைவாய்ப்புகளை இழந்தோருக்கு சில குறிப்பிட்ட ஆதரவை வழங்கி வருகிறது.
அதன்படி பஹ்ரைனில் வசிக்கும் குடிமக்கள் இல்லாத வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் சேவையை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.