அமீரகத்திலிருந்து இந்தியா செல்ல விமானக் கட்டணம் 40 முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக விமான நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முன்னணி பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
மே 1 முதல் 5 வரையிலான 5 நாள் ரம்ஜான் பண்டிகைக்கான விடுமுறையின் போது இந்தியா செல்ல பலர் திட்டமிட்டுவது வழக்கம். ஆனால் இப்போது இந்தியாவுக்கான டிக்கெட் விலை உச்சத்தில் இருப்பதால் இந்தாண்டு ரம்ஜானுக்கு செல்வது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமான டிக்கெட் விலை:
- துபாய் TO மும்பை – 1,365 திர்ஹம்ஸ்
- ஷார்ஜா TO மும்பை – 1,353 திர்ஹம்ஸ்
- துபாய் TO கொச்சி – 2,001 திர்ஹம்ஸ்
தென்னிந்திய மாநிலங்களுக்கு, குறிப்பாக கேரளாவில், இந்த விடுமுறை நேரங்களில் விமான டிக்கெட் விலைகள் உச்சத்தில் இருக்கும் என்று பயண முகவர்கள் தெரிவித்தனர்.
ரம்ஜான் விடுமுறையின் போது கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் திருவனந்தபுரம் போன்ற விமான டிக்கெட்டுகள் சராசரியாக 2,000 திர்ஹம்ஸாக உள்ளது.
அது போல டெல்லி, லக்னோ, அகமதாபாத், கான்பூர் ஆகிய நகரங்களின் விமான டிக்கெட்டுகளும் அதிகரித்துள்ளது. அதாவது நகரங்கள் மற்றும் விமான நிறுவனங்களைப் பொறுத்து விலைகள் மாறுபடுகிறது.
முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் PCR பரிசோதனை மேற்கொள்ள அவசியமில்ல என்றும் ஏர் சுவிதா பதிவு செய்வது கட்டயமாகும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.