நீங்கள் உங்கள் வீட்டை காலி செய்கிறீர்களா? அப்படியானால், உங்கள் DEWA இணைப்பைத் துண்டிப்பது மற்றும் புது இருப்பிட்டத்திற்கு மாற்றுவது குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
DEWA இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான dewa.gov.ae மூலம் மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான துண்டிப்பு செயல்முறையை முழுவதுமாக ஆன்லைனில் மேற்கொள்ளலாம்.
DEWA இணையதளம் மூலம் மின்சாரம் மற்றும் தண்ணீரை துண்டிக்க செய்வதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
- குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்குள் நுழையவும் – dewa.gov.ae
- திரையின் இடது பக்கத்தில் உள்ள ‘MENU’ என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ‘CONSUMER’ என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ‘Supply Management’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- ‘மின்சாரம்/நீரைச் துண்டிக்க செய்தல் என்பதை கிளிக் செய்யவும்.
- நீங்கள் சேவை பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள். மின்சாரம்/நீரை துண்டிக்க செய்வதைத் தேர்வு செய்யவும்.
- CONTINUE-வை கிளிக் செய்யவும்.
- உங்கள் தேவா கணக்கு அல்லது UAE பாஸைப் பயன்படுத்தி உள்நுழையுமாறு கேட்கப்படுவீர்கள். நீங்கள் UAE பாஸைப் பயன்படுத்தினால், DEWA இணையதளம் தானாகவே உங்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் Emirates ID ஆகியவற்றை அடையாளம் கண்டு பதிவு செய்யும்.
- உங்களிடம் DEWA இல் கணக்கு இல்லை இருப்பினும் உள்நுழையாமல் சேவைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், நீங்கள் ஒப்பந்தக் கணக்கு எண் (பத்து இலக்க எண்) மற்றும் வளாக எண் (ஒன்பது இலக்க எண்) ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இந்த இரண்டு எண்களையும் உங்கள் DEWA பில்லில் காணலாம்.
- தேவையான தகவலை உள்ளிட்ட பிறகு, நீங்கள் இப்போது விண்ணப்பத்தை நிரப்ப ஆரம்பிக்கலாம்.
விவரங்களை நிரப்பவும்:
- தொலைபேசி எண்.
மின்னஞ்சல் முகவரி.
துண்டிக்கும் தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்யவும்.
தேவா வெளியிட்டுள்ள ஒரு விழிப்புணர்வு வீடியோவில், விண்ணப்பதாரர்கள் ‘‘Refund To’ இடத்தில் ‘நான் பின்னர் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிப்பேன்’ என்று TYPE செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது. - ‘நான் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்கிறேன்’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘SUBMIT’ என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் விவரங்களை சரிபார்த்து, ‘Confirm’ என்பதை கிளிக் செய்யவும். இது 24 மணி நேரத்திற்குள் செயல்படுத்தப்படும்.
ஆப் மூலம் விண்ணப்பித்தல்:
- நீங்கள் ஆன்லைனில் கணக்கு வைத்திருந்தால், தேவா செயலியிலும் சேவையை கோரலாம்.
- பயன்பாட்டின் மூலம் உங்கள் கணக்கில் உள்நுழைந்ததும், சேவையை முடிக்க மேலே உள்ள கூறப்பட்டுள்ளவற்றை பின்பற்றவும்.
சேவைக்கு எவ்வளவு செலவாகும்?
- மின்சாரம் மற்றும் தண்ணீர் (சிறிய மீட்டர்) இணைப்பை துண்டிக்க 100 திர்ஹம்ஸ்.
- மின்சாரம் மற்றும் தண்ணீர் (பெரிய மீட்டர்) துண்டிக்க 300 திர்ஹம்ஸ்.
- Knowledge Fees 10 திர்ஹம்ஸ்
- Innovation Fees 10 திர்ஹம்ஸ்.
இறுதி DEWA பில்-ஐ எப்போது பெறுவது?
- இறுதி பில் 24 மணி நேரத்திற்குள் செயலாக்கப்படும், அதை நீங்கள் மின்னஞ்சல் மூலம் பெறுவீர்கள்.
- வேலை நாட்களில் காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை துண்டிக்கப்படுவதற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.