UAE Tamil Web

துபாயில் டேக்ஸிக்காக காத்திருக்கீங்களா..? இதோ வந்துவிட்டது புதிய அம்சம்..!

துபாயில் சாலை நெரிசலின்போது டேக்ஸியை பிடிப்பது கடினமாக இருப்பதால், ஆன்லைனில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்று துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

இரு குறித்து  RTA குறிப்பிட்டுள்ளதாவது, Peak Hours இல் வசதியான பயணத்திற்கு ஆன்லைன் மூலம் பயணிகள் டேக்ஸிகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

RTA இன் அறிவிப்பின்படி, Peak Hours:

• திங்கள் முதல் வியாழன் வரை: காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
• வெள்ளி: காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 12 மணி வரை.
• சனி மற்றும் ஞாயிறு: மாலை 4 மணி முதல் 12 மணி வரை.

துபாயில் சாலை நெரிசல் இல்லாத நேரங்களில், வழக்கமாக டேக்ஸிக்கு ஒரு மீட்டருக்கு 5 திர்ஹம்ஸ் ஆகும். அதுவே peak hours இல் ஆன்லைனில் டேக்ஸியை முன்பதிவு செய்தால் 12 திர்ஹம்ஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் சாலையில் டேக்ஸிக்காக காத்திருப்பதைத் தவிர்க்க, முன்கூட்டியே முன்பதிவு செய்ய RTA இந்த அம்சத்தை வழங்கியுள்ளது. 800 88088 என்று அழைத்து டாக்ஸியை புக் செய்துக் கொள்ளாம் அல்லது துபாய் டாக்ஸி கார்ப்பரேஷனின் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனான DTC – அல்லது careem செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். Careem இன் கூட்டு நிறுவனமான டேக்ஸி சேவையான ‘ஹாலா’ டேக்ஸியைப் பெறுவதற்கான விருப்பத்தை உங்களுக்கு வழங்கும். இவ்வாறு RTA தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap