அர்ஜெண்டினாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி நேற்று துபாய் எக்ஸ்போவைப் பார்வையிட்டார். சகிப்புத்தன்மை மற்றும் நல்வாழ்விற்கான அமைச்சரும் எக்ஸ்போவின் கமிஷனர் ஜெனரலுமான ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் மற்றும் கலாச்சாரம் மற்றும் இளைஞர் துறை அமைச்சர் நோரா பின்ட் முபாரக் அல் கேட்பி ஆகியோர் மெஸ்ஸிக்கு எக்ஸ்போ வளாகத்தை சுற்றிக்காட்டினார்.
The football legend and Global Ambassador of Expo 2020 Dubai, Lionel Messi was Expo-loring the greatest showcase of human brilliance and achievement.#Expo2020 #Dubai@NouraAlKaabi@uaeatexpo pic.twitter.com/IdETSlBO9h
— Expo 2020 Dubai (@expo2020dubai) December 13, 2021
மெஸ்ஸி, துபாய் எக்ஸ்போவின் உலகளாவிய தூதுவராக முன்னர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அல் வாசில் பிளாசாவில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சி அருகே தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் மெஸ்ஸி.
இதேபோல போர்ச்சுக்கீசு நாட்டின் பிரபல கால்பந்து வீரர் லூயிஸ் ஃபிகோ-வும் நேற்று துபாய் எக்ஸ்போவைப் பார்வையிட்டார். மாஸ்டர் கார்டு நடத்திய பிரைஸ்லெஸ் சர்ப்ரைஸ் நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
Football legend Luís Figo honoured us with a visit to the pitch at Expo 2020 Dubai as part of Mastercard’s #pricelesssurprises even taking to the pitch for a quick match of the beautiful game!#Expo2020 #Dubai@LuisFigo @mastercardmea pic.twitter.com/vB4chdSAgm
— Expo 2020 Dubai (@expo2020dubai) December 13, 2021