UAE Tamil Web

இந்தியாவில் இருந்து விமானம் மூலமாக அமீரகம் வந்த 140 பயணிகள்..!

Etihad_Air_

இந்தியா – அமீரகம் இடையே விமானப்போக்குவரத்துத் தடை அமலில் இருந்தாலும் கேரளாவின் கொச்சி – அபுதாபி இடையே சார்ட்டர் விமானம் ஒன்று நேற்று காலை 8.15 மணிக்கு இயக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் 140 பயணிகள் கொச்சியிலிருந்து அபுதாபி வந்தடைந்தனர். இதுகுறித்துப் பேசிய கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் இயக்குனர் ஏ.சி.கே நாயர்,” இந்த தனி விமானத்தில் பயணித்த அனைவரும் செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள். அமீரக அரசு அங்கீகரித்திருக்கும் தடுப்பூசிகளில் இரண்டு டோஸ்களையும் இவர்கள் அனைவரும் பெற்றிருந்தனர். பயண நேரத்திற்கு முன்னதான 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை பயணிகள் அனைவரும் வைத்திருந்தார்கள். மேலும் விமானம் கிளம்புவதற்கு நான்கு மணிநேரத்திற்கு முன்பாக பயணிகள் அனைவரும் ரேபிட் பரிசோதனையை எடுத்துக்கொண்டார்கள்” என்றார்.

இது வழக்கமான திட்டமிடப்பட்ட விமானம் இல்லையென்றும் இது எதிஹாட் நிறுவனத்தினால் இயக்கப்பட்ட சார்ட்டர் விமானம் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

Etihad_Air_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap