fbpx
19.3 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

3 நாட்களில் 208 நாடுகளுக்குப் பயணித்து அமீரக பெண் கின்னஸ் சாதனை..!

Khawla-AlRomaithi-posing-in-front-of-the-Sydney-Harbour-Bridge_tcm

அமீரகத்தைச் சேர்ந்த பெண் டாக்டரான காவ்லா அல் ரோமைதி மிகக் குறைவான நேரத்தில் உலகின் 7 கண்டங்களுக்கும் பயணித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அவருடைய இந்த நீண்ட பயணம் முடிவிற்கு வந்தது.

3 நாட்கள் 14 மணிநேரங்கள் 46 நிமிடங்கள் 48 வினாடிகளில் காவ்லா 208 நாடுகளையும் அதனைச் சேர்ந்த பகுதிகளுக்கும் பயணித்துள்ளார். அதாவது உலகின் 7 கண்டங்களுக்கும் காவ்லா பயணித்திருக்கிறார்.

“அமீரகத்தில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். நான் அவர்களுடைய நாடுகளுக்குப் பயணித்து அவர்களுடைய கலாச்சாரத்தை அறிந்துகொள்ள விரும்பினேன்” என்றார் காவ்லா.

Khawla-AlRomaithi-holding-the-flag-of-UAE-in-Wolfang-Australia_
Image Credit: Guinness World Record

கைவிடும் எண்ணம்

“இந்தப் பயண திட்டத்தை பாதியிலேயே கைவிட நினைத்தேன். சொல்லப்போனால் பலமுறை எனக்கு எந்த எண்ணம் வந்தது. ஆனால் தடைகளைத் தாண்டி வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணம் என்னை மேலும் முன்னோக்கி நகர்த்தியது. என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கும் இந்த வெற்றியில் பங்கு இருக்கிறது. நான் சோர்ந்து போகும்போதெல்லாம் அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர். பயணத்தின்போது பொறுமை மிக அவசியம். குறிப்பாக விமான நிலையங்களில் பல்வேறு சவால்களை சமாளிக்கவேண்டிவந்தது ” என காவ்லா தெரிவித்தார்.

“உலகின் மிக உயரமான கட்டிடம், உலகின் மிக வேகமான காரை காவல்துறையில் பயன்படுத்தும் நாடு என அமீரகம் பல உலக சாதனைகளை தன்னிடத்தே கொண்டிருக்கிறது. அதன் குடிமக்களாகிய நாங்களும் எங்களுடைய நாட்டினைப் போன்றே சாதனைகளைப் படைக்க முடியும் என உலகிற்கு எடுத்துக்காட்டவே இந்த பயணத்தை மேற்கொண்டேன்” என காவ்லா குறிப்பிட்டார்.

Khawla-AlRomaithi-posing-in-Santiago-at-night
Image Credit: Guinness World Record

கின்னஸ் உலக சாதனை தினம் கொண்டாடப்படும் நாளன்று காவ்லாவின் சாதனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வருடத்திற்கான கின்னஸ் அமைப்பின் தீமாக “உங்களுக்கான உலகத்தைக் கண்டறியுங்கள்” எனப்பொருள்படும் Discover your World என்ற வாக்கியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

“இந்தக் கடினமான சூழ்நிலையில் “உங்களுக்கான உலகத்தைக் கண்டறியுங்கள்” என்ற கின்னஸ் நிர்வாகத்தின் மையக்கருத்து நன்றாக பொருந்திப்போகிறது. கின்னஸ் உலக சாதனை தினத்தன்று நானும் அதில் அங்கமாக இருக்கிறேன் என்பதை நினைக்கையில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் காவ்லா.



error: Alert: Content is protected !!