UAE Tamil Web

அமீரகத்தில் தஞ்சம் புகுந்தார் ஆபிகானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதால் அங்கிருந்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி உடனடியாக விமானம் மூலம் தப்பிச் சென்றார். முதலில் அவர் அண்டை நாடான தஜிகிஸ்தான் செல்வார் என கூறப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அஷ்ரப் கனி அமெரிக்காவுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் துபாய் வந்திருப்பதாக அமீரக வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் குடும்பத்தினர் துபாயில் தங்கிக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கன் மக்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் அஷ்ரப் கனி மீது கடும் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் நாட்டில் ரத்த ஆறு ஓடுவதை தவிர்க்கவே அங்கிருந்து உடனடியாக வெளியேறியதாக அவர் தனது முகநூலில் தெரிவித்திருந்தார். 4 கார்கள் நிறைய பணத்தை அள்ளிச் சென்றதாகவும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தற்போது அமீரகத்தில் அஷ்ரப் கனி அடைக்களம் புகுந்திருப்பது பேசு பொருளாகி மாறியுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 Share
Share via
Copy link