39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

திடீரென சாலையை கடந்த இளைஞர்.! வேகமாக வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி

acident

ராஸ் அல் கைமா சாலையில் நேற்று வாகனம் மோதிய விபத்தில் 28 வயதான ஆசிய வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாதசாரிகள் சாலையை கடப்பதற்கான வசதி செய்யப்படாத ஒரு இடத்திலிருந்து, எக்ஸ்ட்டென்ஷன் ஆஃப் அல் வக்லத் தெருவை (extension of Al Wakalat Street) கடக்க முயன்ற போது, எதிர்பாராதவிதமாக 40 வயது எமிராட்டி ஒருவர் ஓட்டி வந்த கார் ஆசிய வாலிபர் மீது பயங்கரமாக மோதியுள்ளது. திடீரென சாலையை கடந்ததால் அந்த இளைஞர் மீது வாகனம் மோதுவதை எமிராட்டியால் தவிர்க்க முடியவில்லை. வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து விட்டார்.

விபத்து பற்றி தகவல் தெரிவித்துள்ள ராஸ் அல் கைமா, போக்குவரத்து மற்றும் ரோந்து துறை இயக்குநரான பிரிகேடியர் அஹ்மத் அல் சாம் அல் நக்பி, நேற்று இரவு 10.15 மணிக்கு விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக கூறினார்.

தகவல் கிடைத்தவுடன் போலீஸ் ரோந்து மற்றும் துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், ஆனால் அவர்கள் சென்ற போது சம்பவ இடதிலேயே அந்த இளைஞர் இறந்து கிடந்ததை கண்டதாகவும் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் தங்கள் பாதுகாப்பிற்காக ஜீப்ரா கிராசிங்கிலிருந்து(zebra crossings) சாலைகளை கடக்க வேண்டும் என்று அல் நக்பி வலியுறுத்தியுள்ளார். ஓட்டுநர்களும் வாகனம் ஓட்டும்போது கவனத்துடன் இருக்க வேண்டும், வேக வரம்புகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!