UAE Tamil Web

Palm Jumeirah அருகே கடலில் கிடந்த சடலம்.. அடையாளம் காண உதவுமாறு துபாய் போலீஸ் மக்களிடம் கோரிக்கை – “இறந்தவர் ஆசிய நாட்டவர்”

அமீரகத்தில் கடலில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சடலத்தை அடையாளம் காண உதவுமாறு துபாய் காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தி பாம் ஜுமைரா மற்றும் புர்ஜ் அல் அரப் ஹோட்டலுக்கு இடையே உள்ள கடல் பகுதியில் எந்தவித அடையாள அட்டையும் இல்லா நிலையில் இறந்த அந்த மனிதரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் கருப்பு ஷார்ட்ஸ் மற்றும் நீல நிற டி-சர்ட் அணிந்திருந்தார் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை துபாய் போலீஸ் தங்கள் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் வெளியிட்ட அந்த பதிவில் “இறந்த இந்த நபரை அடையாளம் காண துபாய் காவல்துறைக்கு உதவுங்கள். பாம் ஜுமைரா மற்றும் புர்ஜ் அல் அரப் ஹோட்டலுக்கு இடைப்பட்ட பகுதியில் கடலில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இவர், 40 வயதுடைய ஆசிய நாட்டவர் ஆவார்”.

அவர் உடல் கண்டெடுக்கப்பட்டபோது நீல நிற டி-சர்ட் மற்றும் கருப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்தார், இறந்தவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை. இறந்தவரை அடையாளம் காண உதவும் அனைத்து தகவலும் துறைமுக காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும்.

மேலும் துபாய் போலீஸ் மையத்தையும் மக்கள் தொடர்பு கொள்ளலாம் – 04-901 என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap