துபாயில் சமூக வலைத்தளங்களில் பிரபலம் அடைய திரகத்தை பறக்க விட்ட இளைஞர் கைது!

An Asian man who published a video of him throwing money in the streets to gain followers on social media was arrested by Dubai Police, an official said. (Image Credit: Dubai Police)

துபாயில் பணத்தை சுய விளம்பரத்திற்காக காற்றில் பறக்க விட்ட நபரை போலிஸார் கைது செய்தனர்.

சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களை ஈர்க்கவும், அதிகப்படுத்தவும் வீதியில் பணத்தை காற்றில் பறக்க விட்ட வீடியோவை இளைஞர் ஒருவர் வெளியிட்டார். இதனை அடுத்து துபாய் சைபர் கிரைம் போலிஸாரால் அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

துபாய் போலிஸ் பாதுகாப்பு துறையின் இயக்குனர் கர்னல் பைசல் அல் காசிம் இச்சம்பவம் குறித்து கூறுகையில், ஆசிய நாட்டை சேர்ந்த 30 வயது ஆன இந்த இளைஞர் துபாயின் திரஹம்களை வீசி எறிந்ததாக கூறினார்.

சமூக வலைதளங்களில் பிரபலம் அடைய இது போன்று செய்ததாக அந்த இளைஞன் ஒப்புகொண்டார், என்று அல்காசிம் கூறினார்.

இது போன்ற செயல்கள் பொறுப்பற்றது மற்றும் முறையற்றது, என்று துபாய் போலிஸ் கூறியுள்ளது .

மேலும், கர்னல் அல்காசிம் கூறுகையில்; மக்கள் சட்டத்தை அறிந்து கொள்ள வேண்டும். சைபர் கிரைமின் Article 29ன் படி நாட்டின் நற்பெயரை கேலி செய்யும் விதமாக நடவடிக்கையில் ஈடுபடுதல் அல்லது வதந்திகளை வெளியிடும் நபர்களுக்கு சிறை தண்டனை மற்றும் 1 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Loading...