அமீரகத்தில் பணியிடத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது கிரேனில் இருந்து கீழே விழுந்த கான்கிரீட் கற்களால் தாக்கப்பட்டு நிரந்தரமாக ஊனமுற்ற கட்டுமான தொழிலாளிக்கு தற்போது அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு இழப்பீடாக 1,00,000 திர்ஹம் வழங்கப்பட்டுள்ளது.
விபத்தினால் ஏற்பட்ட உடல், பொருள் மற்றும் தார்மீக சேதங்களுக்கு இழப்பீடாக 5,00,000 திர்ஹம் வழங்க வேண்டும் என்று அந்த “ஆசிய தொழிலாளி” தனது கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் கிரேன் ஆபரேட்டருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ததாக அதிகாரப்பூர்வ நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதி இயக்கிக்கொண்டிருந்த கிரேனில் இருந்து கான்கிரீட் செங்கற்கள் விழுந்த நேரத்திக் தான் அந்த கட்டுமான தளத்தில் பணிபுரிந்ததாக அந்த நபர் தனது வழக்கில் கூறியுள்ளார்.
வெளியான மருத்துவ அறிக்கையில், தொழிலாளிக்கு கடுமையான உடல் காயங்கள் மற்றும் அவரது கால்களில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும் தொழிலாளியின் வலது காலில் 70 சதவீத ஊனம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் விளைவாக, கனமான வேலையைச் செய்ய முடியாததால், அந்த நபர் தனது வேலையை இழந்ததோடு, அந்த நபர் தனக்கு உளவியல் ரீதியாகவும் வலி ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
இறுதியில் இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கிரேன் ஆபரேட்டர் தனது பணியை செய்யாமல் அலட்சியமாக இருந்ததால், கிரேனில் இருந்து கான்கிரீட் கற்கள் சரிந்து விழுந்தது உறுதியானது.