தடகள வீரரான எரிக் கடந்தவார இறுதியில் நடைபெற்ற ADNOC அபுதாபி மராத்தானில் கலந்துகொண்டார். அவர் மட்டுமல்ல. அவரது அம்மாவும் இதில் கலந்துகொண்டார். இதில் ஆச்சர்யம் என்னவெனில் எரிக்கின் தாயால் நடக்க இயலாது. வீல் சேர் தான் வாழ்க்கை என்று இருந்த அவரை மராத்தானுக்கு அழைத்து வந்திருக்கிறார் எரிக்.
அவரது வீல் சேரை தள்ளிக்கொண்டே ஓடிய எரிக் திட்டமிட்டபடி 42 கிலோமீட்டரையும் கடந்திருக்கிறார். “நானும் எனது அம்மாவும் வென்றுவிட்டோம்” என அவர் இறுதியில் தெரிவித்தது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
View this post on Instagram