சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் சிறப்பு விமானம் செல்ல தயாராக இருந்த நிலையில் பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சேதனை நடத்தினர்.
இதனை அடுத்து சென்னையை சேர்ந்த ஒருவரை விசாரித்தனர். அவரது உடைமைகளை சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த கை பைகளில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் அவரிடம் இருந்து இந்திய மதிப்புள்ள 7 லட்சத்து 85 ஆயிரம் அமெரிக்க டாலா்களை கைப்பற்றினர்.
அது போல துபாய்க்கு வரவிருந்த 2 வாலிபர்களின் லக்கேஜை சந்தேகத்தின் பேரில் சோதித்தபோது, அதிலும் கட்டுக்கட்டாக ரூ.14 லட்சத்து 57 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கைப்பற்றப்பட்டது.
இதன் மூலம் மொத்தம் 3 பேரிடம் இருந்து ரூ.22 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிடிபட்ட மூவரிடமும் விசாரனை நடத்தி வருகின்றனர்.