UAE Tamil Web

ஆப்கன் விவகாரத்தில் அமீரகத்தின் மனிதநேய சேவையை பாராட்டிய ஆஸ்திரேலிய பிரதமர்!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதால் அந்நாட்டில் பதற்றம் நிலவி வருகிறது. ஆப்கனில் இருந்து வெளியேற விரும்பும் மக்கள் விமான சேவையின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மனிதநேய அடிப்படையில் அமீரக அரசு விமானங்களை அனுப்பி பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாட்டவர்களை பத்திரமாக துபாய் அழைத்து வந்தது. தொடர்ந்து அங்கிருந்து வெளியேற விரும்புவோருக்கும் உதவிகளை செய்து வருகிறது. பதற்றமான சூழலில் அமீரகத்தின் உதவிகளை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் பாராட்டு தெரிவித்துள்ளார். அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப் படையின் தலைமை துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை தொலைப்பேசி வாயிலாக தொடர்ந்து கொண்டு அமீரகத்தின் உதவிகளை சுட்டிக்காட்டி ஸ்காட் மாரிசன் நன்றி தெரிவித்துள்ளார்.

0 Shares
Share via
Copy link