UAE Tamil Web

முக்கியச் செய்தி: அனைத்து மாணவர்களுக்கும் PCR டெஸ்ட் கட்டாயம் – அபுதாபி கல்வித்துறை அறிவிப்பு..!

school-open-1

இக்கல்வியாண்டில் ( 2021/22) பள்ளி திறக்கப்பட்டு முதல் 14 நாட்களுக்குள் அனைத்து மாணவர்களும் PCR அல்லது உமிழ்நீர் (Saliva) கொரோனா பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என அபுதாபி கல்வியறிவுத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி தடுப்பூசி நிலை அல்லது வயது வரம்பின்றி அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் மூன்றாம் தரப்பு பணியாளர்கள் (Third-party contractors) ஆகியோருக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளிகளுக்கும் குறிப்பிட்ட கொரோனா தடுப்பூசி மையம் ஒதுக்கப்பட்டு, பரிசோதனை எடுக்க வேண்டிய நேரம், தேதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அவர்களது முடிவுகளும் தெரிவிக்கப்படும்.

இதில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்களது பள்ளிக்கென ஒதுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையத்திற்கு குறித்த நேரத்தில் சென்று இலவசமாக பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.

பெற்றோர் பள்ளிகளை தொடர்புகொண்டு டெஸ்ட் எடுக்க வேண்டிய இடம், நேரம், தேதி ஆகியவற்றை கேட்டறியலாம். மேலும், தங்களது சொந்த செலவில் மாணவர்கள் தனியார் பரிசோதனை நிலையங்களில் PCR டெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம்.

அதே நேரத்தில் 12 வயதிற்கு குறைவான வயதுடைய மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களும் இந்த இலவச மையங்களில் கொரோனா PCR பரிசோதனையை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் நாசல் ஸ்வாப் முறைக்குப் பதிலாக உமிழ்நீர் மூலமான பரிசோதனைக்கு விண்ணப்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பரிசோதனை நிலையங்களுக்குச் செல்லும்போது கண்டிப்பாக தங்களது எமிரேட்ஸ் ஐடியை எடுத்துச்செல்ல வேண்டும். எதிர்வரும் காலங்களுக்கான பரிசோதனை அட்டவணை குறித்து பின்னர் வெளியிடப்படும் என அபுதாபி கல்வியறிவுத்துறை தெரிவித்துள்ளது.

 

school-open-1
0 Shares
Share via
Copy link