அமீரக குடிமக்கள் 12 ஆப்பிரிக்க நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுக்கும் பயணிக்கலாம் என்று பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GCAA) மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் அவசர மேலாண்மை ஆணையம் (NCEMA) தெரிவித்துள்ளது.
உலக முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு உச்சம் தொட்டபோது அமீரகத்திலிருந்து பயணிகள் பல நாடுகளுக்கு பயணிக்க தடை விதித்தது அமீரகம். பின்னர் படிப்படியாக சில நாடுகளுக்கு பயணிக்க கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் தற்போது 12 நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளுக்கு அமீரகத்தின் குடிமக்கள் பயணிக்கலாம் என்று (GCAA மற்றும் NCEMA) தெரிவித்துள்ளது. கென்யா, தான்சானியா, எத்தியோப்பியா, நைஜீரியா, காங்கோ குடியரசு, தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, எஸ்வதினி, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 12 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அமீரகத்திலிருந்து பயணிப்பதற்கான தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மேற் குறிப்பிட்ட 12 நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளுக்கு பயணம் செய்ய: கொரோனா தடுப்பூசியை முழுவதுமாக பெற்று பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்ட குடிமக்கள், கொரோனா தடுப்பூசியிலிருந்து மருத்துவரீதியில் விலக்கு அளிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தாத குடிமக்கள், GCAA மற்றும் NCEMA உத்தரவின் பேரில் சிகிச்சைக்காக பயணிப்பவர்கள் ஆகும்.
