UAE Tamil Web

அமீரகத்தில் ஐபிஎல் – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பிசிசிஐ!

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 14வது ஐ.பி.எல் தொடரின் மீதமுள்ள போட்டிகள், செப்டம்பர் 19ம் தேதி முதல் அமீரகத்தில் தொடங்கவுள்ளன. இதில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்பட அனைத்து தரப்பும் இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டிருப்பதை, அணி நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என பி.சி.சி.ஐ உத்தரவிட்டிருந்தது.

IPL 2021 Phase 2: MI vs CSK to open IPL on September 19 in Dubai

இந்நிலையில், போட்டிகளின்போது கடைபிடிக்க வேண்டிய சில புதிய விதிமுறைகளையும் தற்போது பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.

  • பந்து மூலம் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு குறைவு என ஆய்வு முடிவுகள் வெளிவந்தபோதிலும், சிக்ஸர் அடிக்கப்பட்ட பந்துக்குப் பதிலாக வேறு பந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • மைதானத்தைத் தாண்டி ரசிகர்கள் அமரும் பகுதிக்குச் சென்ற பந்தை, சானிடைசர் மூலம் தூய்மைப்படுத்திய பின்னர் பயன்படுத்தலாம்.
  • இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை முடித்துத் திரும்பும் இந்திய வீரர்கள் தங்களைத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
  • பயோ பபுல் எனும் பாதுகாப்பு வளையத்தில் இல்லாத வீரர்கள் மற்றும் அணியினருடன் பயணிக்கும் அனைவரும் மூன்று முறை கொரோனா சோதனை மேற்கொண்டு, ஆறு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்
  • இதுதவிர, ஸ்டேடியத்தின் மேல் அடுக்குகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்தும் பி.சி.சி.ஐ ஆலோசித்து வருகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் அமீரக மக்கள் போட்டியைக் கண்டு மகிழலாம்.
0 Shares
Share via
Copy link