UAE Tamil Web

சாகசப் பயணத்திற்கு அமீரக அரச குடும்ப உறுப்பினருக்கு அழைப்பு – பியர் கிரில்ஸ் அழைத்தது யாரைத் தெரியுமா?

bear grills

இப்போ நீங்க படிக்க போறது உலகின் பல மூலைகளுக்கும் சென்று நம்மால் எப்போதுமே சாப்பிட முடியாதவற்றை ருசிப்பவரும் இயற்கையின் அதீதத்தோடு சமர் செய்பவருமான பியர் கிரில்ஸ்-ஐ பற்றித்தான்.

டிஸ்கவரி என்றாலே அன்னாரின் சாகசங்கள் தான் நம் ஞாபகத்திற்கு வரும். கடல், தீவு, தீபகற்பம், எரிமலை, பனிப்பாறைகள் என சவாலான விஷயங்கள் எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் செல்வதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருக்கிறார் பியர். இவரது சாகசங்கள் காரணமாகவே இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமும் உண்டு. மேலும், சினிமா பிரபலங்கள், உலகப்புகழ் பெற்ற அரசியல்வாதிகளுடனும் சாகச பயணம் செய்துவருகிறார்.

சமீபத்தில் பியர் கிரில்ஸ் பங்கேற்ற நேர்காணலில் அமீரகத்தில் சாகச பயணம் மேற்கொள்ள விரும்புவதாகவும் அதற்கு துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் உடன் வந்தால் மகிழ்ச்சியடைவேன் எனவும் பியர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,”நாங்கள் நிச்சயமாக மத்திய கிழக்கில் இன்னும் பல சாகசங்களை செய்யத் திட்டமிட்டுள்ளோம். உண்மையில், நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிகம் சாகசம் செய்ய விரும்புகிறேன். பட்டத்து இளவரசர் ஃபஸாவை (ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம்) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்திற்கு அழைத்துச் சென்று, துபாய், எக்ஸ்போ மற்றும் பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்த அவரது பார்வையைக் அறிய விரும்புகிறேன். அங்குள்ள மக்களுக்கு இது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் மிகவும் அடக்கமான, சாகசத்தை மையமாகக் கொண்ட, ஆர்வமான நபர். நாங்கள் ஒருமுறை சுருக்கமாகச் சந்தித்தோம். அவருடனான நிகழ்ச்சி சிறந்த ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் மத்திய கிழக்கை நேசிக்கிறேன். நான் அங்கு வர விரும்புகிறேன்” என்றார்.

bear grills
0 Shares
Share via
Copy link