UAE Tamil Web

பெய்ரூட் வெடிவிபத்து: 142 ஆண்டுகள் பழமையான மருத்துவமனையை மீண்டும் கட்டியெழுப்ப 8.7 மில்லியன் திர்ஹம்ஸ் நிதி.! ஷார்ஜா அறக்கட்டளை அறிவிப்பு

blast

மத்திய கிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மிக பெரிய வெடிவிபத்து உலகையே உலுக்கியது. ஏராளமானோரை பலி கொண்ட இந்த விபத்திற்கு பின், ஏராளமான உலக நாடுகள் லெபனானுக்கு ஆதரவு கரம் நீட்டின. இதில் அமீரகமும் அடங்கும்.

இந்நிலையில் பேரழிவில் பாதிக்கப்பட்ட லெபனானின் 142 ஆண்டுகள் பழமையான செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் புனரமைப்புக்கு, ஷார்ஜாவின் தி பிக் ஹார்ட் பவுண்டேஷன்(TBHF), 2.37 மில்லியன் டாலர் (8.7 மில்லியன் திர்ஹம்ஸ்) ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது.

லாப நோக்கமற்ற இந்த மருத்துவமனை 1878 முதல் கடந்த 142 ஆண்டுகளாக அதன் சமூகத்திற்கு சேவை செய்து வந்தது. போர்ட் பெய்ரூட் வெடி விபத்து நடைபெற்ற இடத்திலிருந்தது 900 மீட்டர் தொலைவில் இருக்கும் இது, வெடி விபத்தில் சிக்கி சேதமடைந்ததால் துவக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக செயல்படாமல் போனது. இந்த மருத்துவமனையை புனரமைக்கும் திட்டம் அவசர உதவி மற்றும் நிவாரண பிரச்சாரமான சலாம் பெய்ரூட் முயற்சியின் கீழ் வருகிறது. ஷார்ஜாவின் ஆட்சியாளரின் மனைவி ஷேகா ஜவாஹர் பின்த் முகமது அல் காசிமி அவர்களால் துவக்கப்பட்டது. பேரழிவை ஏற்படுத்திய வெடிவிபத்திற்கு பிறகு பெய்ரூட் நகரத்தை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இட்டு செல்வதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டது.

சிதிலமடைந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை மீண்டும் உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட உள்ளது. மேலும் பழுதுபார்க்கும் பணிகள் 3 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. TBHF ஒதுக்கியுள்ள நிதியில் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை தவிர, மருத்துவ மற்றும் நிர்வாக உபகரணங்கள் வாங்குவதும் அடங்கும்.

TBHF வழங்க உள்ள நிதியுதவியின் ஒரு பகுதி ஒரு புதிய குழந்தை பிரிவின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும், அதில் மூன்று வழக்கமான குழந்தை அறைகள், ஒரு புத்துயிர் அறை மற்றும் ஒரு தனிமை அறை ஆகியவை அடங்கும். புனரமைக்கப்பட்ட பின் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் 40,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி பிக் ஹார்ட் பவுண்டேஷன் இயக்குனர் மரியம் அல் ஹம்தி கூறுகையில், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக சேவை நோக்கில் தரமான மற்றும் இலவச சுகாதார சேவைகளை செய்த் இந்த மருத்துவமனை, நோய்களுக்கான சிகிச்சையின் அதிக செலவுகளை தாங்க முடியாத நோயாளிகளுக்கு ஒரு புகலிடமாக உள்ளது. ஒரு மதிப்புமிக்க மனிதாபிமான அடையாளமாக, லெபனான் கலாச்சார அடையாளத்தின் உறுதியான பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. இத்தகைய மருத்துவமனையை மீண்டும் கட்டியெழுப்புவதில் எங்கள் அறக்கட்டளையின் பங்கு இருப்பது மகிழ்ச்சி என்றார்.

blast
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap