UAE Tamil Web

2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த 100 நகரங்களின் பட்டியல் – டாப் 10-ல் துபாய் – லிஸ்டில் வந்த ஒரே இந்திய நகரம்..!

Stock-Dubai-skyline

பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான யூரோமானிட்டர் இந்த வருடத்திற்கான சிறந்த 100 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 6 அடிப்படை அலகுகளின் அடிப்படையில் நகரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை, சுற்றுலா, தொழில் மற்றும் வர்த்தகம், சுற்றுலா கொள்கைகள் மற்றும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகள், சுற்றுல்லா உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவையாகும்.

இந்த பட்டியலில் டாப் 10 ல் அமீரகத்தின் துபாய் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அபுதாபி 42வது இடத்திலும் ஷார்ஜா 76வது இடத்திலும் இருக்கின்றன.

இந்தியாவின் டெல்லி மட்டும் பட்டியலில் 72 வது இடத்தைப் பிடித்துள்ளது. சவூதியின் ரியாத் 100 வது இடத்திலும் மெக்கா 88 வது இடத்திலும் உள்ளன.

பட்டியலில் உள்ள டாப் 10 நகரங்கள்

  1. பாரிஸ்
  2. துபாய்
  3. ஆம்ஸ்டர்டாம்
  4. மேட்ரிட்
  5. ரோம்
  6. பெர்லின்
  7. நியூயார்க்
  8. லண்டன்
  9. முனிச்
  10. பார்சிலோனா
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap