UAE Tamil Web

குறைவான கட்டணத்தில் உங்களது வீடு மற்றும் அலுவலகத்தினை சுத்திகரிப்பு செய்ய எளியவழி..!

Disinfection Services

சுத்தத்தைப் பேணுதல் என்பது உடல் ஆரோக்கியத்தைத் தாண்டி மன அமைதியும் உத்வேகத்தையும் தரவல்லது. இது நம்முடைய அன்றாடப் பணிகளில் ஆக்கப்பூர்வமாக நம்மை ஈடுபடுத்தச் செய்வதோடு, நலமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கிறது. இதன்காரணமாகவே நமது முன்னோர் “சுத்தம் சோறுபோடும்” எனச் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

வெளிப்புற தூசுக்கள் தரும் தொல்லைகளை விட, நமது அறைக்குள் இருக்கும் நுண் கிருமிகளால் நம்முடைய உடல் அதிக பாதிப்படைகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் நமது சுகாதாரமின்மையே. தினமும் தான் அறையை சுத்தம் செய்கிறோம் என்கிறீர்களா? சரி இப்படிச் சொல்வோம். கையை வெறும் தண்ணீரால் கழுவி நுண்ணோக்கி வைத்துப் பார்த்தால் தெரியும் கிருமிகளுக்கும் தேர்ந்த கிருமிநாசினி கொண்டு கையைக் கழுவிய பிறகு பார்க்கும் போதும் உள்ள கிருமிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணிப்பாருங்கள். அதுதான் இங்கே நான் சொல்ல வருவது.

நம்முடைய வீடு/அலுவலகங்களில் கண்ணுக்குத் தெரியாமல் நம்முடைய ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கக் காத்திருக்கும் கிருமிகள் எண்ணிலடங்காதவை. கொரோனா போன்று கொடும் துயர் காலத்தில் நம்முடைய சுகாதாரத்தை மேம்படுத்துவதே, அரசிற்கு ஒரு பொறுப்பான குடிமகனாக நாம் ஆற்றும் கடமையாகும்.

சரி, யாரை அழைப்பது? செலவு பட்ஜெட்டிற்குள் வருமா? பர்ஸை பதம் பார்த்துவிட்டால்? பயப்படவேண்டாம். இதற்காகவே இருக்கிறது MMTS நிறுவனம். துபாயைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக ஸ்டார் சினிமாஸ் உள்ளிட்ட துபாயின் பல முன்னணி நிறுவனங்களுக்கு சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறது.

வீடுகள், வில்லாக்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஒவ்வொரு இடத்திலும் என்ன மாதிரியான சுத்திகரிப்பு அவசியம் என்பதை அறிந்து அதிநவீன தொழில்நுட்பம் மூலமாக தேர்ந்த அனுபவமுள்ள பணியாளர்களைக்கொண்டு சுத்திகரிப்புப் பணிகளை MMTS மேற்கொண்டுவருகிறது.

MMTS நிறுவனம் வழங்கும் சேவைகள்

  • வீடு/அலுவலக சுத்திகரிப்பு
  • தினசரி அலுவலக சுத்திகரிப்பு
  • தரை சுத்திகரிப்பு
  • பொதுப் பகுதிகளுக்கான பராமரிப்பு
  • சில்லறை வர்த்தகக் கடைகளுக்கான சுத்திகரிப்பு
  • கழிப்பறை தூய்மைப்பணி
  • கட்டிடங்களின் வெளிப்புறப் பகுதி தூய்மைப்பணி
  • கிருமிநாசினிப் பயன்பாடுகள்
  • தரை விரிப்பு மற்றும் இருக்கைகள் சுத்திகரிப்பு
  • உயரமான கட்டிடங்கள் மற்றும் அதன் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகளை தூய்மைப்படுத்தும் பணிகள்.
  • ஒப்பந்தத்தின் அடிப்படியில் வர்ணப்பூச்சு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேற்கண்ட அனைத்து சேவைகளையும் மிகக் குறைந்த கட்டணத்தில் பெற்றிட இப்போதே MMTS நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்புக்கு