UAE Tamil Web

துபாய்: உங்களுடைய வீடு மற்றும் அலுவலகத்தில் பூச்சித் தொல்லையா? அதிலிருந்து விடுபடுவது எப்படி..?

Pest Control Service Dubai

கொளுத்தும் வெயிலில் பணிமுடித்து வேர்வையில் குளித்து, அறைக்குத் திரும்பி படுக்கையில் விழுந்த பின்னர் சுருக்கெனக் கடிக்கும் மூட்டைப் பூச்சியின் மீது ஒரு கோபம் வரும் பாருங்கள். பட்டென்று அடித்து, கை சிவந்து, அடிபட்ட இடம் வீங்கி அது சரியாவதற்குள் அடுத்த பூச்சி நம் படுக்கையில் ஏறியிருக்கும். அப்பறம் என்ன விடிய விடிய கைத்தட்டல் தான். இப்படி உழைத்த களைப்போடு இரவெல்லாம் கண்விழித்திருந்து கைதட்டும் நிலைமை பல இடங்களில் இருக்கத்தான் செய்கிறது.

குறிப்பாக தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில். அறையைத் தூய்மை செய்தாலும் இவை போவதில்லை. மூட்டைப் பூச்சி மட்டுமல்லாது பூரான், கரையான், எலி, கரப்பான்பூச்சி மற்றும் கொசு என அனைத்துமே மனிதனுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்துபவை.

உதாரணமாக நம்முடைய பாத்திரங்களில் கரப்பான்பூச்சியின் எச்சங்கள் இருப்பின், அது நமக்கு வயிற்று உபாதைகளைக் கொடுக்கும் அபாயம் உள்ளது. கரையான் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவை பெருகும் வேகம் நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

பூச்சிகொல்லி என கடையில் கிடைக்கும் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தலாம் எனத் தோன்றுகிறதா? அந்தத் தவறை மட்டும் செய்யாதீர்கள். ஏனென்றால் ஒவ்வொரு பூச்சிக்கும் வித்தியாசமான அளவுகளில் ரசாயன மூலம் இருக்கும். பொத்தாம்பொதுவாக அனைத்திற்கும் ஒன்றை பயன்படுத்தினால் நமக்கே பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். புரியவில்லையா? இப்படிச் சொல்லிப்பார்ப்போம்.

கொசுவைக்கொல்ல பயன்படுத்தும் மருந்தின் அளவும் எலியைக் கொல்ல பயன்படுத்தும் மருந்தின் அளவு ஒன்றாக இருக்க முடியுமா? சுத்தமானால் சரி, என அளவுக்கு மீறி மருந்தினைப் பயன்படுத்தினால் நமக்குத்தான் ஆபத்து என்கிறேன். அதற்கும் முன்னதாக, ஒவ்வொரு வகையான பூச்சுத் தாக்குதலுக்கும் ஒவ்வொரு வகையான தடுப்பு வழிமுறைகள் உள்ளன. ஆகவே, தேர்ந்த அனுபவமுள்ள பூச்சுத் தடுப்பு நிபுணர்களை அழைப்பதே சிறந்தது.

கடந்த 10 ஆண்டுகளாக பூச்சித் தடுப்புத் துறையில் முத்திரை பதித்திருக்கும் எம்பையர் குரூப் துபாய் முழுவதும் பலருக்கும் நிம்மதியான தூக்கத்தை வழங்கியிருக்கிறது. அனுபவமுள்ள பணியாளர்கள், உலகத்தரம் வாய்ந்த சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம், ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தாற்போல் சுத்தப்படுத்தும் முறையை தீர்மானித்தல் என துபாய் முழுவதும் பல குடியிருப்பாளர்கள் மற்றும் அலுவலகங்கள் எம்பையர் குரூப்பின் வாடிக்கையாளர்களாக இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

சுத்தப்படுத்துதல் என்றால் வெறுமனே துடைத்துவிட்டு நகர்வதல்ல. உதாரணமாக கரையான் தாக்குதல். உங்களுடைய வீடு/அலுவலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் தீர ஆய்வு செய்து கரையான் தாக்குதலின் வீரியம் எந்தளவிற்கு இருந்திருக்கிறது? என்பதைக் கண்டுபிடித்த பின்னர் அதற்குத் தகுந்தாற்போல் சுத்தப்படுத்தும் முறையைத் தேர்ந்தெடுப்பர்.

இப்படி உங்களுடைய இடம் எந்த பூச்சிகளினால் அதிகம் பாதிப்பைச் சந்திக்கிறதோ, அதற்குத் தகுந்த தொழில்நுட்பம், இரசாயணம் ஆகியவை பயன்படுத்தப்படுவதுடன் எதிர்காலத்திலும் நீங்கள் இவற்றால் பாதிக்கப்படாதவண்ணம் சேவையை அளிப்பார்கள்.

அதெல்லாம் சரி, இரசாயணம் என்றெல்லாம் வருகிறதே? அதனால் பாதிப்பு ஏற்பட்டால்? என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால், எம்பையர் குரூப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட அவர்களது சேவைகளை துபாய் நகராட்சி அங்கீகரித்துள்ளது. ஆகவே அச்சம் கொள்வதற்குக் காரணமேதுமில்லை.

எம்பையர் குரூப் மேற்கொள்ளும் சேவைகள்

  • பூச்சி தடுப்பு சேவைகள்.
  • சுத்தம் செய்தல்.
  • சுத்திகரிப்பு/ஸ்டெர்லைசேஷன் போன்ற கிருமிநீக்க சேவைகள்.
  • தண்ணீர் தொட்டி சுத்தம் செய்தல்.
  • கட்டிடங்களின் முகப்புப் பகுதிகளை அழகான முறையில் சுத்தம் செய்தல்.

மேற்கண்டவை மட்டுமல்லாமல் பின்வரும் தொழில்நுட்ப சேவைகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது.

  • பெயிண்டிங்
  • பிளம்பிங்
  • தச்சுப்பணி
  • ஏசி பராமரிப்பு

நம்பகமான மற்றும் தெளிவான சேவையும், குறைந்த கட்டணமும் இந்த நிறுவனத்தின் பெயரை துபாய் முழுவதும் பரவச் செய்திருக்கின்றன.

உங்களுடைய வீடு அல்லது தொழிலகங்களுக்கு மேற்கண்ட சேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற விரும்புவோர் கீழ்காணும் என்ற எண்ணினைத் தொடர்புகொள்ளலாம்.