UAE வாகன ஓட்டிகள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!

ஐக்கிய அரபு நாடுகளில் வசிப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும். பல போலி செய்திகள் அதிகம் புழக்கத்தில் உள்ளது. எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல் மூலம் ஸ்கேமர்ஸ்(Scammers) இப்போது வாகன ஓட்டிகளையும், வேலை தேடுவோரையும் குறிவைத்துள்ளனர்.

சம்பவங்கள்:

சம்பவம் 1: இது தொடர்பாக எமிரேட்ஸ் பயாஸ் முகம்மது என்பவர் குறிப்பிடுகையில்; எனக்கு சமீபத்தில் போக்குவரத்து போலீஸில் இருந்து அனுப்பப்படும் செய்தி போலவே ஒரு குறுந்தகவல் என்னுடைய மொபைல் நம்பருக்கு வந்தது. அதில் “உங்களுடைய ஓட்டுனர் உரிமம் விரைவில் காலாவதியாகிவிடும். ஆகவே, இந்த லிங்கைக் கிளிக் செய்வதன் மூலம் என்னை புதுப்பித்துக் கொள்ளலாம்” என்று கூறப்பட்டுருந்தது.

சம்பவம் 2: இது போலவே எகிப்திய குடியிருப்பாளரான இப்ராஹிம் ராடி என்பவர் வாட்ஸ்அப் செய்தியில், அவரது வாகனத்திற்கு எதிராக ஒரு டிராஃபிக் அபராதம் வழங்கப்பட்டதாக மோசடி கும்பல் அவருக்கு அறிவித்தது. மேலும், சூடான் குடியிருப்பாளரான சையட் அப்துல் வஹாப் என்பவரை மோசடிக்காரர்கள் சில சிறப்பு வாய்ந்த வாய்ப்புகள் பெற இந்த இணைப்பை கிளிக் செய்து 33 ஆயிரம் திர்கம் பெறுங்கள்” என்று பொய்யான தகவல்களை அனுப்பியுள்ளனர்.

சம்பவம் 3: ஒரு எகிப்திய குடியிருப்பாளரான அஹ்மத் எல் பிஹெரி, அண்மையில் ஒரு செய்தியைப் பெற்றார். அதில் ஒரு அடையாளம் தெரியாத நபர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பணம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். மேலும், அவர் உடனடியாக கப்பல் கட்டணம் செலுத்த வேண்டும். நேரம் தவறினால் அபராதம் விதிக்கப்படும். நான் திரும்ப தருவதாக உறுதியளித்ததாக கூறினார்.

மேலும் எல் பிஹெரி பணம் பரிமாற்றம் செய்ய தயாராகிவிட்டார். ஆனால் அவருக்குள் சில சந்தேகம் எழுந்தது. அதைப் பற்றி சிந்தித்தார்.”யார் இந்த நபர் மற்றும் அவருக்கு என் மொபைல் எண் எப்படி கிடைத்தது. அதோடு அந்த முடிவை மாற்றினார். இதுபோன்ற சம்பவம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அனைவரும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இது போன்ற தகவல்களை செயலுக்கு கொண்டுவருமுன் வல்லுனர்களிடம் ஆலோசிக்க வேண்டும். அறியப்படாத ஒரு தளத்திலிருந்து அல்லது நபர்களிடம் இருந்து ஒரு மின்னஞ்சலைப் பெறுகையில், நண்பர்கள் அல்லது நிபுணர்களுடனோ தொடர்பு கொண்டு உறுதி செய்ய வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க குழுவினரிடம் சந்தேகத்திற்குரிய நடைமுறைகளை அறிவிக்க வேண்டும்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRA) வெளியிட்ட அறிக்கையில் போலி வேலைகள், போக்குவரத்து அபராதங்கள், கூடுதல் ஊதியம், மின்னஞ்சல் மற்றும் WhatsApp கணக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய போலி WhatsApp ஊழல் செய்திகளைப் பற்றி பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்தது.

நமக்கு வரும் போலி செய்தியில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்தால், அது பயனரின் தனிப்பட்ட தகவல்களை எடுத்துவிடும் என்று TRA தெரிவித்தது. இதுபோன்ற செய்திகளை புறக்கணித்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்களை வலியுறுத்தி வருகிறது.

ஆகவே, UAE மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். மேலும் இது போன்ற போலி தகவல்களை அரசு கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் TRA பொதுமக்களை வலியுறுத்தி வருகிறது.