UAE Tamil Web

அமீரக வாகன ஓட்டிகளே உஷார்… எச்சரிக்கை விட்ட காவல்துறை!

அமீரகத்தில் இன்று அதிகமான மூடுபனி ஏற்பட வாய்ப்பிருப்பதால் வாகன ஓட்டிகளை கவனமாக வாகனங்களை ஓட்டுமாறு தேசிய வானிலை ஆய்வு மையமான (NCM) தெரிவித்துள்ளது.

இது குறித்து NCM கூறுகையில், நேற்று இரவு புதன்கிழமை பிப்ரவரி 23 இரவு 11 மணி முதல் இன்று  வியாழன் பிப்ரவரி 24 காலை 9:30 மணி வரை, பெரும்பாலான உள் மற்றும் கடலோரப் பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்பு உள்ளது.

அபுதாபி காவல்துறையினர், வாகன ஓட்டிகளின் தங்கள் வாகனத்தின் வேகத்தை குறைக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அபுதாபி – துபாய் சாலையில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வேகக் குறைப்பு செயல்படுத்தப்பட்டு உள்ளதால், பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுமாறும், வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பனிமூட்டமான சூழ்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 500 திர்ஹம்ஸ் அபராதமும் 4 Black Mark புள்ளிகளும் விதிக்கப்படும்.

கனரக வாகனங்கள், லாரிகள், பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் போக்குவரத்து விதிகள் மற்றும் வேகக் குறைப்புக்கு ஒத்துழைக்குமாறு அபுதாபி போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவு காவல்துறை எச்சரித்துள்ளது.

0 Shares
Share via
Copy link