UAE Tamil Web

அபுதாபி பிக் டிக்கெட்: இரண்டாவது முயற்சியிலேயே 1 கோடி திர்ஹம்ஸ் வென்ற இந்தியர்..!

Big-Ticket-winner-from-Oman_

இந்தியாவைச் சேர்ந்தவரும் ஓமானில் வசித்துவருபவருமான ரஞ்சித் வேணுகோபாலன் தான் இந்த வார அபுதாபி டிக்கெட்டின் வெற்றியாளர் ஆவார். 234 சீரிஸில்  052706 என்ற எண் கொண்ட டிக்கெட்டினை கடந்த நவம்பர் 27 ஆம் தேதி வாங்கியிருக்கிறார்.

அந்த டிக்கெட் தான் நேற்று நடைபெற்ற டிராவில் வேணுகோபாலனுக்கு 10 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை பெற்றுத் தந்திருக்கிறது. இரண்டாவது முயற்சியிலேயே இவருக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

ஓமானில் கணக்காளராக பணிபுரிந்து வரும் வேணுகோபாலனுக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார். தன்னுடன் பணிபுரியும் 5 நபர்களுடன் இணைந்து பரிசை பகிர்ந்துகொள்ள இருக்கும் இவர், தனது சொந்த ஊரான கேரளாவில் வீடு கட்ட இருப்பதாகும் மகளுடைய படிப்பிற்கு இதனைப் பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல, இரண்டாம் பரிசான 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை அல் அய்னில் வசித்துவரும் இந்தியரான அப்துல் மஜீத் வென்றிருக்கிறார்.

பிக் டிக்கெட்டில் கலந்துகொள்வது எப்படி? எனத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Big-Ticket-winner-from-Oman_
12 Shares
Share via
Copy link