UAE Tamil Web

துபாய்: குடும்பத்தோடு காரில் சென்று கொண்டிருந்த இந்தியருக்கு வந்த ஃபோன் கால்.! வண்டியை ஓரம் கட்டி பேசியவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..

draw

துபாயில் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் வசித்து வரும் இந்தியர் ஒருவர் பிக் டிக்கெட் அபுதாபி ரேஃபிள் டிராவில் பங்கேற்று, 12 மில்லியன் திர்ஹம்ஸ் பணப்பரிசை வென்றுள்ளார்.

- Advertisment -

துபாயில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை நிர்வாகியாக(sales executive) வேலை பார்த்து வரும் 51 வயதான ஜார்ஜ் ஜேக்கப்ஸ், அபுதாபியில் இன்று நடைபெற்ற பிக் டிக்கெட் டிராவில் சீரிஸ் எண் 222-இல், வெற்றி பெற்றுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக மாதம் தோறும் ஆன்லைனில் அபுதாபி பிக் டிக்கெட்டை வாங்கி வருகிறார்.

வழக்கம் போல கடந்த நவம்பர் 30-ஆம் தேதி டிக்கெட் எண் 069402-ஐ வாங்கிய ஜார்ஜ் ஜேக்கப்ஸின் கனவு இறுதியாக இன்று நிறைவேறியுள்ளது. தான் பெற்றுள்ள ஜாக்பாட் குறித்து மகிழ்ச்சியுடன் பேசிய ஜார்ஜ், நான் உண்மையில் மெகா டிராவை வென்றுள்ளேன் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. சில நிதி சிக்கல்களால் தான் அவதிப்பட்டு வந்த நிலையில், இந்த வெற்றியை மிகப்பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறேன்.

பிக் டிக்கெட் அமைப்பாளரான ரிச்சர்ட் எனக்கு கால் செய்த போது, எனது குடும்பத்தினருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். வாகனத்தை இயக்கி கொண்டிருந்த போது எனக்கு கால் வந்ததால், சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு கால் பேசினேன். அப்போது நான் வென்ற செய்தியை ரிச்சர்ட் எனக்கு கூறினார். நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு கிடைத்த மிகசிறந்த நல்ல செய்தி இது. இந்த ஒரு கால் எனது வாழ்க்கையை மொத்தமாக மாற்றி விட்டது’என்று உற்சாகம் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசியுள்ள ஜார்ஜ், ‘எனது மகளுக்கு 24 வயது. என் மகன் துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த வெற்றியில் இருந்து எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பணத்தை சேமிப்பேன்’என்று கூறியுள்ளார்.