எஸ்தோனியா மற்றும் ரொமானியாவில் இருந்து வளர்ப்பு மற்றும் காட்டுப் பறவைகள், ஆகியவற்றை இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளது அமீரகம்.
இதுகுறித்து பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MoCCAE) வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” அனைத்து வளர்ப்பு மற்றும் காட்டுப் பறவைகள், குஞ்சுகள், குஞ்சு பொரிக்கும் முட்டைகள், பதப்படுத்தப்படாத பொருட்கள் ஆகியவற்றை எஸ்தோனியா மற்றும் ரொமானியாவில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தடைக்கான காரணம் குறித்து அமைச்சகம் ஏதும் தெரிவிக்கவில்லை எனினும், ஊடகங்கள் எஸ்தோனியா மற்றும் ரொமானியாவில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதாக தெரிவித்துவருகின்றன.
#moccae #وزارة_التغير_المناخي_والبيئة pic.twitter.com/I00A4k9tVw
— MoCCAE (@MoCCaEUAE) March 1, 2021