துபாய் பயணத்தின்போது தமிழக முதல்வர் அணிந்திருந்த ஆடை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு செய்தியை பரப்பிய பாஜக நிர்வாகியை காவல்துறை கைது செய்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் EXPO கலந்துகொண்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 5 நாட்கள் துபாய்க்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் அருள் பிரசாத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் ஸ்டாலின் அணிந்து சென்ற ஓவர் கோட் ரூ.17 கோடி என்றும், அந்தத் தகவலை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
டிவிட்டரில் இதனை கண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய நபர் மீது, தவறான தகவல்களை மக்களிடம் பரப்பும் சம்பவம் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்.
காவல்துரையின் விசாரணையில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு செய்தி பரப்பியவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் பிரசாத் என்பதும், அவர் பாஜக மேற்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராக என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து பாஜக நிர்வாகி அருள் பிரசாத் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.