UAE Tamil Web

பேட்டரியை மாற்றியதால் தீப்பிடித்த படகு : இரண்டு இந்திய மீனவர்கள் காயம்..!

-BOAT-FIRE

ராஸ் அல் கைமாவின் கலெய்லா  துறைமுகத்திற்கு (Ghaleilah port) அருகே மீன்பிடிக்கச் சென்ற படகில் திடீரென தீப்பிடித்ததால் அதிலிருந்த இரண்டு இந்தியர்கள் காயமடைந்தார்கள்.

- Advertisment -

இந்த விபத்து இன்று காலை 8.30 மணிக்கு ஏற்பட்டிருக்கிறது. காயமடைந்த இரு இந்தியர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவர் அகமது அல் மஹ்போபி (Ahmad Al Mahboubi) தெரிவித்தார்.

இதுகுறித்துப்பேசிய ராஸ் அல் கைமா மீனவ சங்கத்தின் தலைவர் திரு. கலீஃபா அல் முஹைரி,” விபத்து நிகழ்ந்த படகில் இருந்த இரு இந்தியர்கள் படகின் பேட்டரியை மாற்றியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. கடலில் மீன்பிடி படகுகளில் ஏற்படும் தீ விபத்துகள் மோசமானவை. ஆகையால் மீனவர்கள் கவனமுடன் செயல்படவேண்டும். படகுகள் சீரான இடைவெளியில் பராமரிப்பு செய்யப்படவேண்டும்” என்றார்.

இன்று காலை நிகழ்ந்த இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள்.