UAE Tamil Web

10 வருடங்களுக்கான கோல்டன் விசாவைப் பெற்றார் பிரபல பாலிவுட் நடிகை மௌனி ராய்..!

MOUNY ROY

பாலிவுட் நடிகையான மௌனி ராய்க்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை வழங்கியிருக்கிறது வெளியுறவு மற்றும் குடியிருப்புக்கான தலைமை இயக்குனரகம். குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படும் இந்த கோல்டன் விசாவை இந்தியாவின் சஞ்சய் தத், மோகன்லால், மம்மூட்டி, திரிஷா, பின்னணிப் பாடகி சித்ரா, மீரா ஜாஸ்மீன் உள்ளிட்டவர்களுக்கு அமீரக அரசு முன்னர் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் 44,000 பேருக்கு கோல்டன் விசாவானது வழங்கப்பட்டிருப்பதாக GDRFA சமீபத்தில் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இதுகுறித்துப் பேசிய மௌனி ராய்,” துபாய் எனது இரண்டாவது தாயகமாகும். பல்வேறு திறமைகளைக் கொண்டவர்கள் சாதிக்க வாய்ப்பளிக்கும் இடமாக துபாய் திகழ்கிறது. எனக்குக் கிடைத்த இந்த விசாவை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். என்னுடைய அடுத்த சில படங்கள் துபாயில் ஒளிப்பதிவு செய்யப்பட இருக்கின்றன” என்றார்.

MOUNY ROY
1 Share
Share via
Copy link