UAE Tamil Web

அமீரகத்தின் கோல்டன் விசாவைப் பெற்றார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்..!

SANJAI DUTT

பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத்-ற்கு அமீரக கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பிரபலம் ஒருவருக்கு கோல்டன் விசா வழங்கப்படுவது இதுவே முதல்முறை.

ஸ்பான்சர் இல்லாமல் வெளிநாட்டினர் அமீரகத்தில் தங்கி, பணிபுரிய வழிவகை செய்யும் விதமாக கடந்த 2019 ஆம் ஆண்டு நீண்டகால விசாவை அறிமுகப்படுத்தியது அமீரகம். இதன்மூலம் 5 மற்றும் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவை தாமாகவே புதுப்பித்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சஞ்சய் தத்,”GDRFA வின் இயக்குனர் மேஜர் ஜெனரல் முகமது அல் மர்ரி அவர்களின் முன்னிலையில் கோல்டன் விசாவைப் பெற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. அமீரக அரசிற்கு நன்றி. மேலும் ஃப்ளை துபாயின் மூத்த அதிகாரியான ஹமாத் ஒபைதுல்லா அவர்களுக்கும் எனது நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SANJAI DUTT
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap