துபாயின் மிகப்பெரிய ஃபேஷன் பொருட்களுக்கான விற்பனைத் திருவிழாவை CBBC நடத்த இருக்கிறது. நவம்பர் 25 ஆம் தேதி துபாய் உலக வர்த்தக மையத்தில் துவங்கவுள்ள இந்நிகழ்ச்சியில் துவக்க விழாவில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்துகொள்ள இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் அவருடைய ஃபேஷன் பிராண்டான ஸ்டார்ஸ்ட்ரக் -கின் புதிய பொருட்களையும் அவர் அங்கே காட்சிப்படுத்த இருக்கிறார். பல்வேறு நிறங்களில் லிப்ஸ்டிக்ஸ், ஐ லைனர், கலோசஸ், லைனர்ஸ், மஸ்காரா, ஹைலைட்னர் ஆகியவை அவரது கண்காட்சியில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25 துவங்கி டிசம்பர் 4 ஆம் தேதிவரையில் நடைபெற இருக்கும் இந்த விற்பனைக் கண்காட்சியில் மேக்ஸ் மாரா, மைக்கேல் கோர்ஸ், ரால்ப் லாரன், பால் ஸ்மித், கென்சோ, கார்ல் லாகர்ஃபீல்ட், ஆர்கன்சில், பெவர்லி ஹில்ஸ் போலோ கிளப் மற்றும் பல முன்னணி பிராண்ட்கள் இடம்பெற இருக்கின்றன.
இதுகுறித்து மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் +97152 821 2809 என்ற எண்ணிற்கு கால் செய்தோ அல்லது வாட்சாப் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.