UAE Tamil Web

அமீரகத்தில் புத்தக வடிவிலான நூலகம்.. பெருமையோடு திறந்து வைத்தார் Sheikh Mohammed – இதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன??

துபாய் க்ரீக் கரையில் புத்தக வடிவில் அமைக்கப்பட்ட முகமது பின் ரஷித் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில், அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், 1 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த திட்டத்தில் ஒன்பது முக்கிய நூலகங்கள் உள்ளன என்றார்.

வரும் ஜூன் 16, வியாழன் அன்று இந்த மாபெரும் நூலகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். இதை “Beacon of Knowledge” (அறிவின் கலங்கரை விளக்கம்) என்று அழைத்த அவர், ஏழு மாடி கட்டிடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் ஆறு மில்லியன் ஆராய்ச்சி ஆய்வறிக்கைகள் உள்ளன என்றார்.

“இன்று நாங்கள் எங்கள் புதிய தலைமுறையினருக்காக ஒரு கலாச்சார மற்றும் அறிவுசார் கட்டிடத்தை தொடங்குகிறோம், இதன் மூலம் வாசிப்பை மேம்படுத்துதல், அறிவை மேன்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்”.

“மனித மனதை ஒளிரச் செய்வதே எங்கள் குறிக்கோள்” என்றும் ஷேக் முகமது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புனித குர்ஆனை வைத்திருக்கப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய மர புத்தக பலகையான Rehl வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட நூலகம் அல் ஜடாப்பில் கட்டப்பட்டுள்ளது. ஷேக் முகமது பின் ரஷீத் இந்த திட்டத்தை முதன்முதலில் 2016ல் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது MENA (Middle East and North Africa) பகுதியில் உள்ள மிகப்பெரிய கலாச்சார மையம் மற்றும் நூலகமாகும். அதன் ஏழு தளங்கள் முழுவதும், முகமது பின் ரஷித் நூலகம் குறிப்பிடத்தக்க உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.

இதில் அரபு மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான அச்சிடப்பட்ட மற்றும் டிஜிட்டல் புத்தகங்கள், 6 மில்லியனுக்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள்; சுமார் 73,000 Music Scores, 75,000 வீடியோக்கள்; சுமார் 13,000 கட்டுரைகள் மற்றும் 5,000 க்கும் மேற்பட்ட வரலாற்று அச்சு மற்றும் டிஜிட்டல் இதழ்கள் உள்ளன.

இதன் சிறப்பு அம்சமாக கிட்டத்தட்ட 500 அரிய சேகரிப்புகளையும் கொண்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap