துபாய் மக்களின் கண்களை கவரும் வகையில் மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டது தான் சேக் ஜைத் சாலையில் உள்ள அருங்காட்சியகம். உலகின் மிக அழகிய அருங்காட்சியகங்களில் துபாயின் இந்த ‘மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்’ ஒன்று. இந்த அருங்காட்சியகம் இம்மாத இறுதியில் திறக்கப்படும் என்று துபாய் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அழகிய வடிவமைப்பில் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கான நுழைவு டிக்கெட்டுகள் விற்பனை ஆன்லைனில் தொடங்கி உள்ளது. அதனை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயின் புகழ்பெற்ற சேக் ஜைத் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.motf.ae-ல் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என்றும் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான நுழைவு இலவசம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் 60 வயதுக்கு மேற்பட்டோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களும் இலவசமாக அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்..
துபாயின் ‘மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்’அருங்காட்சியகத்தை பார்வையாளர்கள் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை காணலம்.
இதுவரை யாரும் கண்டிடாத விதத்தில் வலைவான வட்ட வடிவில் அமைந்துள்ளதால் காண்போருக்கு என்ன கட்டிடம் என்றுக் கூட தெரியாமல் இருந்தது. அந்த அருங்காட்சியகத்தின் வெளிப்பகுதியில் அரபு மொழிகளால் பொறிக்கப்பட்டு, அதிலிருந்து ஒளி வருவதுபோல இருப்பதால் காண்போரின் கண்களை கவர்ந்து இழுக்கிறது.