UAE Tamil Web

அமீரகத்தில் யாருக்கெல்லாம் பூஸ்டர் டோஸ் தேவையில்லை..?

அபுதாபி பொது சுகாதார மையம் (ADPHC) சுகாதாரத்தை மேலும் மேம்படுத்துவதற்கும், சமூகத்தை பாதுகாப்பதற்கும் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வலியுறுத்தி உள்ளது.

அபுதாபி பொது சுகாதார மையம் வலியுறுத்தலின்படி, இரண்டாவது டோஸ் செலுத்திய ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் எடுக்காதவர்கள், Alhosn App இல் பச்சை நிற நிலையில் இருப்பார்கள்.

கொரோனா நோயாளிகள், தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைகளில் பங்கேற்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவ மதிப்பீட்டை வைத்து வெளியே தடுப்பூசியைப் பெற்றவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பீஸ்டர் டோஸிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

7 Shares
Share via
Copy link