UAE Tamil Web

நாளைக்குள் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்களுக்கு கிரீன் ஸ்டேட்டஸ் ரத்து – ஷாக் கொடுத்த அபுதாபி அரசு..!

VACCINE

அமீரக அரசின் கொரோனா கண்காணிப்பு அப்ளிகேஷனான Alhosn -ல் கிரீன் ஸ்டேட்டஸ் இருந்தால் மட்டுமே அபுதாபியில் பொது இடங்களுக்கு மக்கள் அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றினை அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு முன்னர், சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறவில்லை எனில் அவர்களது கிரீன் ஸ்டேட்டஸ் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி: சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்கள் ஆறு மாத காலம் முடிந்ததற்குப் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறவேண்டும் என ஆணையம் முன்னரே தெரிவித்திருந்தது. ஆகஸ்டு 20 ஆம் தேதிமுதல் 30 நாட்களுக்கு இதற்காக கால அவகாசமும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சினோபார்ம் தடுப்பூசியை முழுமையாக எடுத்துக்கொண்டவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறவில்லை எனில் அவர்களது கிரீன் ஸ்டேட்டஸ் ரத்து செய்யப்படும் எனத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியக் குறிப்பு: சினோபார்ம் தவிர அமீரக அரசால் அங்கீகாரம் பெற்ற வேறு தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு இந்நடைமுறை பொருந்தாது.

VACCINE
8 Shares
Share via
Copy link