UAE Tamil Web

மரத்தில் மோதிய டிரக்; உயிருக்குப் போராடிய இந்தியரை தனியாளாக காப்பாற்றிய அமீரகப் பெண்..!

ambulans

ஷார்ஜா இண்டஸ்ட்ரியல் ஏரியா 12 ல் சில நாட்களுக்கு முன்னர் மோசமான விபத்து ஒன்று நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த டிரைவர், தான் ஓட்டிச் சென்ற ட்ரக்கை மரத்தில் மோதியிருக்கிறார். அப்போது அவர் குடி போதையில் இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக் குறித்து காவல்துறை மற்றும் தேசிய ஆம்புலன்ஸ்க்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆம்புலன்சில் வந்த மருத்துவப் பணியாளரான ஒஹௌத் அப்துல் ரஹ்மான் செர்கல் என்னும் பெண் ட்ரக் கண்ணாடியை உடைத்து டிரைவரை வெளியே எடுத்திருக்கிறார்.

தனியாளாக அவரை ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்குச் செல்லும்வரையில் அவரது உயிரைக்காப்பாற்ற போராடியுள்ளார். சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் இந்தியர் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

ambulans
0 Shares
Share via
Copy link