UAE Tamil Web

துபாய் : தேராவில் பற்றி எரியும் பிரம்மாண்ட பிளாஸ்டிக் கிடங்கு..!

Fire-in-Deira

துபாய்: தேராவின் அல் கபெய்சி பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கிடங்கு ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அபூபக்கர் அல் சித்திக் தெருவில் இருக்கும் (அல் கபைல் டிஸ்கவுன்ட் செண்டருக்கு பின்புறம்) பிளாஸ்டிக் கிடங்கில் பற்றிய தீயினால் அப்பகுதியே புகையினால் சூழப்பட்டுள்ளது.

சயீத் துறைமுகப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க துபாய் சிவில் பாதுகாப்புத்துறை முயன்று வருவதாகவும் இந்த விபத்தில் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏதுமில்லை என துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

சயீத் போர்ட் தீயணைப்பு மற்றும் மீட்பு அலுவலகத்தைச் சேர்ந்த வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருவதாகவும் வாகனவோட்டிகள் மாற்றுப் பாதையில் செல்லுமாறும் துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

Fire-in-Deira
8 Shares
Share via
Copy link