UAE Tamil Web

துபாய்: நிர்வாணப் புகைப்படங்களை மாணவிக்கு அனுப்பிய ஆசிரியர் – தோண்டத் தோண்ட வெளிவரும் புதுத்தகவல்கள்..!

teacher-arrested-for-sexual-harassment-of-students

துபாயில் உள்ள பிரபல பள்ளியைச் சேர்ந்த 19 வயது மாணவி அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் பிரிட்டிஷ் நாட்டைச்சேர்ந்த 39 வயது நபர் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். ஸ்னாப்சாட் அப்ளிகேஷன் மூலமாக தனது நிர்வாணப் புகைப்படங்களை ஆசிரியர் தனக்கு அனுப்பியதாக அந்த மாணவி புகாரில் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து ஜனவரி 7 ஆம் தேதி துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார். இருப்பினும் தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அவர் மறுத்திருக்கிறார். காவல்துறையில் புகாரளித்தால் மானபங்கப்படுத்துவேன் என ஆசிரியர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

விசாரணையில் அதிர்ச்சியான கருத்துக்களை ஆசிரியர் முன்வைத்திருக்கிறார். தனது போனில் அந்த அப்ளிகேஷனை தரவிறக்கி எப்படி அதனைப் பயன்படுத்தவேண்டும் என மாணவிதான் தனக்குச் சொல்லிக்கொடுத்ததாக ஆசிரியர் தெரிவித்திருக்கிறார். மேலும், சில ஆபாசமான உடைகள் அணிந்த புகைப்படங்களை மாணவி தனக்கு அனுப்பியதாகவும் தன்னை கவர பல வழிகளில் முயற்சித்ததாகவும் ஆசிரியர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தனது 16 வயதில் நிகழ்ந்த இந்த சம்பம் குறித்து மூன்று ஆண்டுகள் கழித்து பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு புகாரளித்த மாணவி இதுகுறித்துப் பேசுகையில்,” பள்ளியில் படிக்கும்போதே இதனைத் தெரிவித்தால் ஒருவேளை எனது கல்வி பாதிக்கப்படுமோ என அஞ்சினேன். அதன்காரணமாகவே இப்போது பள்ளி நிர்வாகத்திடமும் காவல்துறையிடமும் புகார் அளித்திருக்கிறேன்” என்றார்.

ஆசிரியரின் வழக்கறிஞர் அவாதிஃப் முகமது இதுகுறித்துப் பேசுகையில்,”தடயவியல் ஆய்வு அறிக்கையின்படி எவ்வித மெசேஜ்களும் அவருடைய (ஆசிரியர்) போனில் இருந்து அழிக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது. மேலும் காவல்துறை விசாரணைக்கு அவர் தனது போனை ஒப்படைத்திருக்கிறார். ஆனால் மாணவி தனது போனை கொடுக்க மறுத்துவிட்டார். ஒருவேளை ஆசிரியரின் போனில் அப்ளிகேஷனை தரவிறக்கி தனது புகைப்படங்களை மாணவியே அவருக்கு அனுப்பி அதன்பிறகு அப்ளிகேஷனை உபயோகிக்க கற்றுக்கொடுத்து அவரை சிக்கலில் சிக்க வைத்திருக்கவேண்டும்” என்றார்.

ஆதாரங்கள் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி ஆசிரியரை வழக்கில் இருந்து விடுவிக்க அவாதிஃப் வலியுறுத்தியிருக்கிறார். இந்த வழக்கின் தீர்ப்பு மே 30 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.