புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு LED விளக்குகள் அமைத்த தமிழருக்கு கின்னஸ் சாதனை விருது!

Burj Khalifa LED light maker got Guinness record

துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிபா உலகிலேயே உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது நாம் அறிந்ததே.

இது சுமார் 163 மாடிகளைக் கொண்டது. மேலும், 828 மீட்டர் உயரம் கொண்டது. 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி இதன் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி புர்ஜ் கலிபா திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு LED விளக்குகள் மிகவும் பிரசித்தி பெற்றது. விழா காலங்களில் இதன் ஒளிரும் விளக்குகள் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும், அந்த அளவிற்கு இதன் அமைப்பு தனித்துவம் பெற்றது.

இந்த LED விளக்குகளை அமைத்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழ்நாடு, திருப்பத்தூர் பகுதியை சார்ந்த அப்துல்லா (எ) முபாரக் அலி அவர்கள் இரண்டு கின்னஸ் சாதனைக்கான விருதை பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த முபாரக் அலி அமீரகத்தில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளது தமிழ் மக்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது. இவரின் சேவை தொடர தமிழ் உறவுகள் அனைவரும் இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Loading...