அமீரக மகளிர் தினத்தை முன்னிட்டு துபாய் புர்ஜ் கலிஃபாவில் காட்சிப்படுத்தப்பட்ட மின்னிடும் விளக்குகள்.!

Burj Khalifa Lights Up Celebrating Emiratis Womens Day

நேற்று அமீரக மகளிர் தினம் சிறப்பான முறையில் அமீரகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அமீரக மகளீர்களை போற்றும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும் பல்வேறு பதிவுகளை தங்களின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வந்தனர்.

இந்நிலையில் உலகின் மிக உயரமான கட்டிடம் என்று அழைக்கப்டும் “துபாய் புர்ஜ் கலிஃபா”-வில் அமீரக மகளீர் தினத்தை முன்னிட்டு மின்னிடும் விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டது. அதில், அமீரக மகளீர்களை கௌரவிக்கும் விதத்தில் பல்வேறு வசனங்கள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Loading...