துபாய் மக்களின் கண்களை கவரும் வகையில் மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டது தான் சேக் ஜைத் சாலையில் உள்ள அருங்காட்சியகம். உலகின் மிக அழகிய அருங்காட்சியகங்களில் துபாயின் இந்த ‘மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்’ ஒன்று. இந்த அருங்காட்சியகம் இம்மாத இறுதியில் திறக்கப்படும் என்று துபாய் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா நேற்று பிரமிக்க வைக்கும் வகையில் ஒளித்தது. மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தை போன்று புர்ஜ் கலிஃபா முழுவதும் வெள்ளி நிறத்தில் ஒளிபரப்பபட்டது. மேலும் 22.2.2022 அன்று அருங்காட்சியகம் திறக்கப்படும் என்றும் புர்ஜ் கலிஃபா மூலம் தெரிவிக்கப்பட்டது.
அமீரகத்தின் துணை பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் டிவிட்டரில், மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் அருங்காட்சியகத்தை உலகின் மிகவும் அழகான கட்டிடம் என்று தெரிவித்திருந்தார்
30,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் பிப்ரவரி 22 ஆம் தேதி பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது.
துபாயின் மையப்பகுதியில் அமைந்துள்ள பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகளை பெறலாம்: www.motf.ae. நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு 145 திர்ஹம்ஸ் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம் 77 மீட்டர் கட்டமைப்பில் துருப்பிடிக்காத ஸ்டீல் மற்றும் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது. ஜன்னல்களிலிருந்து LED விளக்குகள் மூலம் ஒளிரச்செய்கிறது. மேலும் வெளிப்புறத்தில் ஷேக் முகமதுவின் வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது.