UAE Tamil Web

“கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் துணைநிற்போம்” – புர்ஜ் கலீஃபாவில் வெளியிடப்பட்ட வீடியோ..!

burj khalifa

கொரோனாவின் இரண்டாம் அலை சுனாமிபோல இந்தியாவில் சுழன்று வீசிவருகிறது. பார்க்கும் திசையெல்லாம் நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாடால் உயிரிழப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபா இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவிற்குத் துணை நிற்கும் வகையில் நேற்று இரவு வீடியோ ஒன்றினை திரையிட்டது.

“இந்தியாவுடன் துணைநிற்போம்” என்னும் பொருள்படும் #StayStrong என்னும் ஹேஷ்டாக்கை திரையில் தோன்றச் செய்திருக்கிறது புர்ஜ் கலீஃபா.