சவூதி – அமீரகம் இடையேயான நட்பு வரலாற்றின் ஆதி பக்கங்களிலேயே துளிர் விட்டதாகும். இன்றைய தேதிவரையில் ராஜாங்க விஷயங்களில் இந்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதைப் பார்க்க முடியும்.
அதன் நீட்சியாக வரும் வியாழக்கிழமை சவூதி தேசிய தினத்தன்று துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபா சவூதியின் தேசியக்கொடியின் நிறமான பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் மிளிர இருக்கிறது. அதனைத்தொடர்ந்து துபாய் ஃபவுண்டைனில் சவூதி தேசிய கீதம் இசைக்கப்பட இருக்கிறது.
வியாழன் இரவு 8 – 9 மணிவரையில் இந்நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி தேசிய தினம்
1932 ஆம் ஆண்டு நெஜத் மற்றும் ஹஜேஸ் ராஜ்ஜியம் என இருந்ததை அப்போதைய சவூதி அரசர் அப்துல் அஜீஸ் இப்னு சவுத் சவூதி அரேபியா ராஜ்ஜியம் எனப் பெயர்மாற்றம் செய்ய உத்தரவிட்டார். இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்த நாளே சவூதியின் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.
