ஸ்வீடன் நாட்டில் புனித குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகமான (MoFAIC), மனித கொள்கைகளுக்கு முரணான பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் அனைத்து நடைமுறைகளையும் அமீரகம் நிராகரிக்கிறது.
வெறுப்பு பேச்சுக்களை கைவிடவும், வன்முறையை கைவிடவேண்டும்” என்று அமீரக அரசு வலியுறுத்தியது.
மேலும், மத அடையாளங்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டு காட்டி, மதங்களை அவமதிப்பதன் மூலம் வெறுப்பைத் தூண்டுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டது. சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு மதிப்புகளை பரப்ப வேண்டிய அவசியம் குறித்தும் அமீரகம் அறிவுறுத்தியது.