துபையில் நடந்த கோர பஸ் விபத்து. 17 பேர் பலி.!

Bus Accident in Dubai Near Rashidiya exit
Image Credit: Khaleej Times

ரமலான் பெருநாளுக்காக ஓமனிலிருந்து துபாய் வந்துவிட்டு மீண்டும் ஓமன் திரும்பிக்கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது.

ரஷீதியா எக்ஸிட்(Rashidiya exit) அருகில் ஷேக் முஹம்மது பின் சயீத் சாலையில் மாலை 5.40 மணிக்கு நடந்த இந்த கோர விபத்தில் வெவ்வேறு நாட்டை சேர்ந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும், 5 பேர் கடுமையான காயங்களுடன் இருக்கின்றனர் என்று துபாய் போலீஸ் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்தவர்கள் ரஷீத் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

Source: Khaleej Times

Loading...