கன மழையால் புஜைராவின் பள்ளத்தாக்கில் சிக்கிய பேருந்து.!

fujairah rain

புஜைரா நகரின் வெகுதூர பள்ளத்தாக்கை கடக்க முயன்றபோது மழை வெள்ளத்தில் சிக்கிய ஒரு பேருந்தை, சிவில் பாதுகாப்பு துறை சாதுரியமாக வெளியே எடுத்துள்ளது.

இதுகுறித்து புஜைரா சிவில் பாதுகாப்பு இயக்குனர் பிரிகேடியர் அலி அல் துனைஜி கூறுகையில், “நன்கு பயிற்சி பெற்ற மற்றும் உயர்தர ஆயுதம் ஏந்திய மீட்புக் குழுக்கள், சிக்கிக்கொண்ட அந்த பேருந்தை பள்ளத்தாக்கிலிருந்து மேலே எடுத்து பாதுகாப்பான இடத்தில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவத்தினால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த குழுக்கள் இதேபோன்று பல அவசரகால சூழ்நிலைகளில் கலந்து கொண்டு, பல உதவிகளை செய்துள்ளனர்.” என்றார்.

மேலும் அனைத்து ஓட்டுநர்களும் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். மழைகாலத்தில் இதுபோன்ற வெள்ளம் சூழ்ந்த பள்ளத்தாக்குகளைக் கடந்து, மலைகளுக்கு மேலே அல்லது அருகில் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது என்பதால், ஓட்டுநர்கள் நிதானத்தை கையாள அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்கள் பெய்த கன மழையினால் சில சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் சில பகுதிகளில், குறிப்பாக ஹாம் பள்ளத்தாக்குக்கு அருகே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஆதலால் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும், வேகத்தை குறைக்கவும், மலைப்பகுதிகளையும் பள்ளத்தாக்குகளையும் தவிர்க்கவும் மற்றும் கூடுதல் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தல்களை RAK காவல்துறை மெஸேஜ் அனுப்பியுள்ளது.

Loading...